• Login / Register
  • செய்திகள்

    திருகோணமலையில் இருந்து மகிந்த ராஜபட்ச தப்பியோட்டம்

    இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச, பிரதமர் மகிந்தா ராஜபட்ச மீது மக்களின் கோபம் திரும்பியது. இருவரும் பதவி விலக கோரி பல்வேறு போராட்டங்களை மக்கள் முன் வைத்தனர். ஆளும்கட்சியினர் மக்கள் மீது நடத்திய தாக்குதல் காரணமாக கலவரம் மூண்டது.


    இதையடுத்து பிரதமர் பதவியை விட்டு விலகிய மகிந்தா ராஜபட்ச அவரதுஅதிகாரபூர்வ இல்லமான டெம்பிள் டிரீ எனப்படும் அலரி மாளிகையை விட்டு ராணுவத்தினரின் துணையுடன் வெளியேறினார்.


    குடும்பத்துடன் வெளியேறிய அவர் திருகோணமலையில் உள்ள கடற்படைத்தளத்தில் பலத்த பாதுகாப்புடன் தங்கியிருந்தார். மக்கள் அந்த கடற்படைத்தளத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். பின்னர் திருகோணமலையில் உள்ள ஒரு தீவுக்கு மகிந்தா ராஜபட்ச இடம்பெயர்ந்து அங்கே தங்கியிருப்பதாக செய்தி பரவியது.


    இந்தநிலையில் திருகோணமலையில் இருந்து மகிந்தா ராஜபட்ச பலத்த பாதுகாப்புடன் வெளியேறியுள்ளதாகத் தற்போது தகவல்கள் பரவி வருகின்றன. அவர் இலங்கையில்தான் உள்ளாரா அல்லது வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று விட்டாரா என்பது தெரியவில்லை.

    இதனால் பரபரப்பு நிலவுகிறது.

    Leave A Comment