• Login / Register
  • செய்திகள்

    12 ஆண்டுகளுக்குப்பிறகு மதுரை-தேனி ரயில் : மகிழ்ச்சியில் பயணிகள்

    மதுரை-போடி இடையே 98 கிலோ மீட்டர் தொலைவுள்ள மீட்டர் கேஜ் இரும்புப் பாதையை அகலப் பாதையாக மாற்றும் பணி 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

    2016ஆம் ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு இந்த அகலப் பாதை பணிக்கு 450 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

    அதன்பின் அகலப்பாதை பணி முடிந்து 11 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மதுரையில் இருந்து இந்த அகலப்பாதையில் ரயில் இயக்கப்பட்டது. முதல்கட்டமாக தேனி வரை இந்த ரயில் இயக்கப்பட்டது.

    11 ஆண்டுகளுக்குப்பிறகு மதுரை-தேனி இடையே ரயில் இயக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த ரயிலில் பயணம்  செய்தனர்.

    மதுரை-தேனி இடையிலான இந்த ரயில் மதுரையில் இருந்து காலை எட்டரை மணிக்கும், தேனியில் இருந்து மதுரைக்கு மாலை 6.15 மணிக்கும் புறப்படுகிறது. இந்த ரயிலுக்கான கட்டணம் 45 ரூபாய் ஆகும்.

    Leave A Comment