• Login / Register
  • செய்திகள்

    அடித்துக் கொல்லப்பட்ட ஆளும்கட்சி எம்.பி. – இலங்கையில் ராணுவம் குவிப்பு

    இலங்கையில், பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதனையடுத்து அவரது ஆதராவாளர்கள் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், அதிபருக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதலை நடத்தினார்கள்.

    இதோடு மட்டுமின்றி, காலிமுகத்திடல் பகுதியில் இருந்த அரசுப் பேருந்துகள், மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கியதோடு தீயிட்டும் கொளுத்தினார்கள்.

    இந்த வன்முறையில், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் எம்.பி. யான அமரகீர்த்தி அத்துகொரல தனது காரை மறித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், எம்.பி. அமரகீர்த்தி அத்துகொரல மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    இந்த நிலையில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய பின் காவல்துறையினர் எம்.பி.யின் வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது, உயிரிழந்த நிலையில், அத்துகொரலவின் உடல் மீட்கப்பட்டது.


    இதனிடையே கொழும்பு, காலிமுகத்திடல் அருகே நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

    இது குறித்து காவல்துறையினர் வெளியிட்டு தகவலில், காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    மேலும், பாதுகாப்பை பலப்படுத்தவும், பொதுமக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் வகையிலும் ராணுவம் மற்றும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    Leave A Comment