• Login / Register
  • செய்திகள்

    இலங்கை வழியில் இந்தியா- ராகுல் காந்தி

    இலங்கையில் நிர்வாக சீர்கேடு மற்றும் முறையாக ஆட்சியை நடத்த தவறியதால், அந்த நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

    இதனால் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார்.

    இதனையடுத்து, இலங்கையில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 300 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

    இதனை தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக் கொண்டார். இருப்பினும், இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு, மின்சார தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளில் தவித்து வருகிறது.

    இந்த நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில், கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இலங்கையுடன், இந்தியாவை ஒப்பிட்டு ஆறு கிராபிக்ஸ் வரைப்படங்களுடன் கூடிய ஒப்பீட்டு படத்தை அவர்  பகிர்ந்துள்ளார்.


    ‘இந்த புகைப்படத்தில், வேலை வாய்ப்பின்மை, எரிபொருள் விலை உயர்வு மற்றும் மதவாதப் பிரச்னை உள்ளிட்டவைகளை, தற்போதைய இலங்கையின் நிலையுடன் ஒத்துப் போவது போல் இருக்கிறது.

    அதில், மக்களை திசை திருப்புவது உண்மைகளுக்கு மாற்றானது. இந்தியா, பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வழியில் பயணிப்பது போல் இருக்கிறது’ என மத்திய அரசுக்கு எதிராக கடும் விமர்சனத்தை ராகுல் பகிர்ந்துள்ளார்.

     

    Leave A Comment