• Login / Register
  • செய்திகள்

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு

    தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உயர்ந்துள்ளது என காவல்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் 442 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் பெண்களுக்கு எதிராக இதுவரை 4,469 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இணையதள குற்றங்கள் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை கடந்த 2011ஆம் ஆண்டில் 748 ஆக இருந்தது.

    இந்த நிலையில், தற்போது கடந்த 2021ஆம் ஆண்டு இறுதி வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இணையதள குற்ற புகார்களின் எண்ணிக்கை 13,077 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும், இதுபோன்ற இணையதள குற்ற வழக்குகளில் வெளிநாட்டினரே அதிக அளவில் ஈடுபட்டு வருவதால் அவர்களை கைது செய்வது சவாலானதாக உள்ளதாக அந்த விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment