• Login / Register
  • செய்திகள்

    கர்நாடக மாநிலத்தில் கலவரம்: போலீஸ் வாகனம் எரிப்பு ஊரடங்கு அமல்

    கா்நாடக மாநில் ஹூப்பள்ளியில் உள்ள தர்வாத் மாவட்டத்தில் சமூக வலைதளத்தில் ஒருவர், மற்றொரு சமூகத்திற்கு எதிரான வகையில் புகைப்படத்தை பதிவிட்டார்.

    சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படத்தை பதிவிட்ட ஹூப்பள்ளி பகுதியை சேர்ந்த அபிஷேக் ஹிரேமத் என்பவரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.

    அந்த சர்ச்சைக்குரிய பதிவைத் தொடர்ந்து அப்பகுதியில் கலவரம் மற்றும் வன்முறை வெடித்தது. இந்த கலவரத்தில் ஹூப்பள்ளியில் உள்ள மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், அனுமன் கோவியில்கள் சூறையாடப்பட்டன.

    காவல்துறையினர், கலவரக்காரர்களை விரைந்து தடியடி நடத்தி அகற்றினர். இந்த கலவரத்தில் 12 காவல்துறையினர் காயமடைந்தனர். இதனிடையே கலவரம் தொடர்பாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    கலவரத்தில் ஈடுபட்டதாக 40 பேர் கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஹூப்பள்ளி நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

    இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இது திட்டமிட்ட தாக்குதல் என்றும், இந்த சம்பவத்திற்கு பின்னால் இருந்து வன்முறையை தூண்டியவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். இந்த சம்பவத்துக்கு அரசியல் சாயம் பூசவேண்டாம், இதனை சட்ட ஒழுங்கு கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.


    Leave A Comment