• Login / Register
  • செய்திகள்

    'அனைத்து மாணவர்களையும் முதல்வன் ஆக்கும் திட்டம்': முதல்வர் ஸ்டாலின்

    சென்னை பல்கலைக் கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவில் ஆளுநர் ஆர். என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

    பின்னர் மேடையில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திற்கு மட்டுமல்ல உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது தான் சென்னை பல்கலைக் கழகம்.

    அனைத்து மாணவர்களையும் முதல்வனாக்க உருவாக்கப்பட்டது தான், 'நான் முதல்வன் திட்டம்'. இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு தமிழக அரசு அனைத்து நலன்களையும் செய்து கொண்டிருக்கிறது.

    தமிழகத்தில் தற்போது நிதிப் பற்றாக்குறை இருந்த போதிலும், மாணவிகளின் கல்வி மற்றும் எதிர்கால நலன் கருதி, மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளது. 

    வேலைக்கு தகுந்தாற் போல், இளைஞர்கள் கிடைக்கவில்லை என பல நிறுவனங்கள் கூறுகின்றன. எனவே இளைஞர்கள் அனைவரும் தங்களது தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

    மாணவர்களின் எதிர்கால உயர்வுக்கு பட்டம் ஒர் அடித்தளம். எந்த இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கவில்லையென குற்றம் சுமத்தாத நிலையை தமிழகம் எட்ட வேண்டும். என்பது நமது அரசின் குறிக்கோளாகும்.

    காமராசரின் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலம் போல, கலைஞரின் ஆட்சிக் காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலம் போல, எனது தலைமையிலான ஆட்சிக் காலம் உயர்கல்வியின் பொற்காலம் ஆகவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்'

    இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டார்.

    Leave A Comment