• Login / Register
  • செய்திகள்

    பெட்ரோல் விலையை குறைத்திடுக: தலைமைச் செயலகம் நோக்கி பா.ஜ.க.பேரணி

    தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தலைமை செயலகத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். 

    எழும்பூர், ராஜாரத்தினம் விளையாட்டரங்கத்தில் இருந்து திரளான பாரதிய ஜனதா கட்சியினர் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியின் போது, பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 100 மானியம் வழங்க வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாதைகளை ஏந்தியவாறு சென்றனர்.


    இந்த நிலையில், பேரணியில் ஈடுபட்டவர்கள் தலைமைச் செயலகம் நோக்கி வருவதை தடுக்க காவல்துறையினர் தடுப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இதனால் பாரதிய ஜனதா கட்சியினர் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனிடையே, பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டத்தினரிடையே பேசினார். 

    அப்போது, ‘அமைச்சர்கள் ஒவ்வொரு ஊராக சென்று உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என தீர்மானம் போடுகின்றனர்.

    ஆனால், பிரதமர் மோடி நேற்று, கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

    இன்று விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க உள்ளார். பா.ஜ.க.வினர் நடத்தும் போராட்டத்தில் இருந்து தப்பிக்கலே முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று விட்டார்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தமிழகத்தின் வீதியெங்கும் பரவிக்கிடக்கிறது.

    மேலும், விரைவில் தி.மு.க., செய்த ஊழல் பட்டியலை விஞ்ஞானப்பூர்வமாக வெளியிடுவோம்’

    இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

    Leave A Comment