அமெரிக்காவில் தீபாவளி விடுமுறை: மசோதா நிறைவேற்றம்
அமெரிக்காவின் நியூயார்க் மாநிலத்தில் தீபாவளி விடுமுறைக்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
நியூ யார்க் மாநில ஆளுநர் கேத்தலீன் ஹோக்கல், தீபாவளி அன்று நியூ யார்க்கில் உள்ள பொது பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் வாழ்கிற நியூ யார்க் மாகாணத்தில் இந்தியர்களின் விழாவான தீபாவளிக்கு விடுமுறை அறிவித்திருப்பது முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய மாதக்கணக்கின்படி எட்டாவது மாதம் 15-ம் நாள் இந்த விடுமுறை அளிக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூ யார்க் மாகாணத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்காவின் பெரிய கல்வி மாகாணங்களில் நியூ யார்க்கும் ஒன்று.
அம்மாநில சட்டபேரவை உறுப்பினரும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஜெனிஃபர் ராஜ்குமார் முன்னெடுத்த இந்த மசோதா தற்போது ஆளுநரின் ஒப்புதல் பெற்று சட்டமாக நிறைவேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment