• Login / Register
  • செய்திகள்

    ஈரானில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள்; அமீரகத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது!

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தெற்கு பகுதியில் இன்று (17) செவ்வாய்கிழமை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரக நேரப்படி காலை 8.59 மணியளவில், தெற்கு ஈரானில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.

    அதன் பின் காலை 9.10 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் 6.0 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அதன் நில அதிர்வுகளை அமீரகத்தில் வசிப்பவர்களும் உணர்ந்ததாக கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தற்பொழுது மீண்டும் ஈரானில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமீரகத்தில் இன்று பகலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து NCM வெளியிட்ட பதிவில் “ஈரானில் மூன்றாவது முறையாக மதியம் 12:22 மணிக்கு NCM மற்றொரு 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது மற்றும் இது வடக்கில் உள்ள ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களால் உணரப்பட்டது. இந்த நில அதிர்வுகள் அமீரகத்தில் வசிப்பவர்களால் லேசாக உணரப்பட்டது” என வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.

    எவ்வாறாயினும், நிலநடுக்கங்கள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் உணரப்பட்டதாகவும் NCM தெரிவித்துள்ளது.

    Leave A Comment