தெற்கு பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
தெற்கு பிலிப்பின்ஸில் உள்ள டாவோ ஆக்சிடென்டல் மாகாணத்தில் இன்று காலை 9.39 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் எற்பட்டதாக நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில்,
இந்த நிலநடுக்கம், சாரங்கானி நகரத்தில் உள்ள பலுத் தீவின் தென்கிழக்கே 434 கி.மீ தொலைவிலும், 122 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக பிலிப்பின்ஸ் எரிமலை மற்றும் நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கமானது எந்தவித சேதத்தையும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் விளைவாக சுனாமி எற்படுவதற்கான அபாயம் இல்லை எனக் கணிக்கப்பட்டுள்ளது.
Leave A Comment