முடிவுக்கு வருமா கூட்டணி சர்ச்சை...? இபிஎஸ் தலைமையில் நாளை முக்கிய ஆலோசனை!
அதிமுக - பாஜக கூட்டணி சர்ச்சை நீடித்து வரும் நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்ப்பட்டுள்ளது.
காலத்திற்கு காலம் அதிமுக - பாஜக தரப்பு தலைவர்கள் ஏட்டிக்கு போட்டியாக தெரிவித்து வரும் கருத்துகளால் கூட்டணி தொடர்பான சர்ச்சை சூடு பிடிப்பதும் பின் தணிவதுமாக இருந்து வந்த நிலையில் அண்ணா தொடர்பில் அண்ணாமலை தெரிவித்த கருத்து பெரும் அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
எம்.ஜி.ஆர். மாளிகையில் நாளை பிற்பகல் தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து விட்டு தமிழகம் திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய நிலையில், கூட்டத்தில் கூட்டணி நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Leave A Comment