வெண்ணை சாப்பிட்டு கின்னஸ்ஸில் இடம்பிடித்த இளம் பெண்..!
அரைக்கிலோ வெண்ணெயை வெறும் 1 நிமிடம் 2.34 நொடிகளில் சாப்பிட்டு முடித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஒரு பெண்.
லியா என்ற பெண் முன்னெடுத்த இந்த சாதனை குறித்து கின்னஸ் சாதனை அமைப்பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
ஒரு டேபிளின் முன்னே லியா அமர்ந்திருக்க, அவருக்கு முன்னால் வெண்ணெய் கட்டிகள் பெரியதாக வைக்கப்படுகின்றன. போட்டிக்கான கவுண்டன் தொடங்கிய அடுத்த சில நொடிகளிலேயே ஒரு வெண்ணெய் கட்டியை முழுவதுமாக சாப்பிட்டு முடித்தார் லியா.
உணவுப் பிரியரான லியா வெவ்வேறு உணவுகளை போட்டி வைத்து சாப்பிட்டு, இதுவரை 33 முறை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
Leave A Comment