17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: எங்கெல்லாம் தெரியுமா
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, செப் 19ஆம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment