புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் ஆரம்பமானது!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் இன்று பிற்பகல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
பழைய நாடாளுமன்ற வளாகத்தில் இன்று காலை நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் நாடாளுமன்ற அனுபவங்கள் குறித்து மூத்த உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்டனர்.
பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை இன்று காலை எடுத்துக் கொண்டனர்.
பின், பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, பகல் 1.15 மணியளவில் மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மக்களவைத் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி, ராகுல் காந்தி மற்றும் அனைத்துக் கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர்.
Leave A Comment