• Login / Register
  • செய்திகள்

    அம்மனாக சோனியா காந்தி: சனாதனத்தை அவமதிக்கும் செயல் - பாஜகவினர் விமர்சனம்

    சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட்டுகள் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டப்பட்டத்தை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

    தெலுங்கானா - ஐதராபாத்தில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்களை வரவேற்று பல இடங்களில் கட்-அவுட் பேனர்கள் வைத்திருந்தனர். அதில் சோனியா காந்தியை அம்மன் வேடத்தில் சித்தரித்து கட் அவுட்டுகள் பேனர்கள் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர். சோனியா காந்தி அம்மன் வேடத்தில் நகை கிரீடம் அணிந்தபடி அதில் காட்சியளித்தார். 

    மேலும் அவரது வலது கையில் இருந்து தெலுங்கானா தோன்றுவது போல வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் சோனியா காந்தியை தெலுங்கானா மாநிலத்தின் அன்னை என அதில் எழுதியுள்ளனர். இது தெலுங்கானா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    இதற்கு அந்த மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறை மந்திரியும், தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான ஜி.கிஷன் ரெட்டி, சோனியா காந்தியை 'தெலுங்கானா தாய்' போல் சித்தரிப்பது சனாதன தர்மத்தை அவமதிக்கும் செயல் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.






    Leave A Comment