இத்தாலியில் நிலநடுக்கம் - பாடசாலைகள் ரயில் சேவைகள் முடக்கம்!
இத்தாலியில் இன்று (18) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து பாடசாலைகள் மூடப்பட்டும் ரயில் சேவைகள் அடைநிறுத்தப்பட்டுள்ளன.
மத்திய இத்தாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 4.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய இத்தாலியில் புளோரன்ஸ் நகருக்கு வடக்கே இன்று அதிகாலை உள்ளுர் நேரம் 5.10 மணியளிவ்ல நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இச்சம்பவத்தில் இதுவரை எவ்வித உடமைகளுக்கும் உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி நிலநடுக்க அபாயம் உள்ள பகதியாக அடையாளம் காணப்பட்ட இடம் என்பதால் நிலமைகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave A Comment