தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்; தீவிர விசாரணை!
இலங்கையில் இருந்து மர்மப் படகில் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி - மூன்றாம் மணல் தீடையில் ஈழத் தமிழர் ஒருவர் இன்று (18) திங்கடகிழமை தஞ்சமடைந்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழ முடியாத நிலையில் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு தஞ்சமடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி - மூன்றாம் மணல் தீடையில் ஈழத் தமிழர் ஒருவர் இன்றைய தினம் தஞ்சமடைந்துள்ளார்.
இவ்வாறு தனுஷ்கோடி மூன்றாம் மணல் தீடையை தனித்து நின்றிருந்த குறித்த ஈழத்தமிழர் தான் மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற தகவலை மாத்திரம் அங்கிருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மரைன் போலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து தனுஷ்கோடி காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment