• Login / Register
  • செய்திகள்

    சீமான் காவல் நிலையத்தில் ஆஜர்..!

    நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார். நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பாக இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.

    நடிகை விஜயலட்சுமி, தன்னை சீமான் மதுரை கோயிலில் வைத்து திருமணம் செய்ததாகவும், பலமுறை கருத்தரித்து, அதை சீமான் கலைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டி புகாா் அளித்தாா். அதன்பேரில், சீமானுக்கு போலீஸாா் இரண்டு முறை அழைப்பாணை அனுப்பினா்.

    இதற்கிடையே, கடந்த வெள்ளிக்கிழமை சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை விஜயலட்சுமி தெரிவித்தார்.

    இந்த நிலையில், போலீஸின் அழைப்பாணையை ஏற்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக சீமான் திங்கள்கிழமை காலை ஆஜரானார். அவரது மனைவி, வழக்கறிஞர்கள் உள்பட 5 பேர் மட்டுமே காவல் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சீமானுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கூடியுள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



    Leave A Comment