உலகத் தலைவா்களின் மதிப்பீட்டில் மோடி முதலிடம்!
ஜி20 உச்சி மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், உலகத் தலைவா்களின் வாராந்திர மதிப்பீட்டில் பிரதமா் நரேந்திர மோடி இந்த வாரம் முதலிடம் வகிக்கிறாா்.
உலகம் முழுவதும் மக்களால் தோ்வு செய்யப்பட்ட தலைவா்களின் புகழ், செயல்பாடு மதிப்பீட்டை வாராந்திர அடிப்படையில் கணக்கிட்டு ‘மாா்னிங் கன்சல்ட்’ அமைப்பு வெளியிட்டு வருகிறது.
ஜி20-உச்சி மாநாடு தில்லியில் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில், கடந்த வாரம் நடத்தப்பட்ட ஆய்வில், 76 சதவீத மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக பிரதமா் மோடி முதலிடம் வகிக்கிறாா். அதே வேளையில், 18 சதவீத மக்கள் அவரது தலைமையை ஏற்கவில்லை.
பிரதமா் மோடிக்கு அடுத்து 64 சதவீத மக்கள் ஏற்றுக்கொண்ட தலைவராக ஸ்விட்சா்லாந்து அதிபா் அலெய்ன் பொ்செட் 2-ஆவது இடத்தில் உள்ளாா்; 26 சதவீத மக்கள் அவரது தலைமையை ஏற்கவில்லை.
இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபா் பைடன், பிரான்ஸ் அதிபா் மேக்ரான், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் உள்ளிட்ட பல உலகத் தலைவா்களின் தலைமையை ஏற்கும் மக்களின் சதவீதத்தைவிட ஏற்காதவா்களின் சதவீதமே அதிகமாக உள்ளது.
உலகத் தலைவா்கள் பட்டியலி ல் முதலிடம் வகிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் தலைமைக்கு பாஜக தலைவா்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனா்.
Leave A Comment