• Login / Register
  • செய்திகள்

    தமிழக மீனவர்கள் 15 பேருக்கு சிறை - இருவர் சிறுவர் இல்லத்தில் சேர்ப்பு!

    எல்லைதாண்டி மீனபிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் நேற்று முன்தினம் (13) அதிகாலை கைது செய்யப்பட்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை பகுதி மீனவர்கள் 17 பேரை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் யாழ்ப்பாணம் நீரியல்வளத் திணைக்கள  அதிகாரிகள் நேற்று (14) முற்படுத்தினர்.

    குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி J.கஜநிதிபாலன் மீனவர்கள் 17 பேரில் இருவர் சிறுவர் என்பதால் இந்திய துணை தூதரக அதிகாரிகளின் மேற்பார்வையில் அச்சுவேலி சிறுவர் நன்னடத்தை இல்லத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    எஞ்சிய மீனவர்களை வரும் 27ம் திகதி வரை நீதிமன்ற விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

    IND/TN/10/MM/407 ம் இலக்க படகில் பயணித்த இராமநாதபுரத்தை சேர்ந்த

    1- ராஜப்பன் - அருண் (வயது-36),

    2- அந்தோனி லியோன் - சகாயகிங்ஸ்ரன் (வயது-38),

    3- முனியாண்டி - பாலமுருகன் (வயது-50),

    4- அந்தோனிசாமி - இன்னாசிகிறீற்றன் (வயது-46), 

    5- இருதயராஜ் - றிமோற்றன் (வயது-18),

    6- கிறிஸ்ரின் - காறல் மார்க்கஸ் (வயது-41),

    7- சுப்பிரமணியன் - முருகன் (வயது-52),

    8- மெல்ரன் - காலைப் (வயது-16)


    IND/TN/16/MM/2046 ம் இலக்க படகில் பயணித்த

    1- ராமகிருஸ்ணன் - கேவன் (வயது-29), புதுக்கோட்டை

    2- ரங்கய்யன் - கிருஸ்ணகுமார் (வயது-38), நாகபட்டினம்

    3- அழகிரி - முருகேசன் (வயது-48), தஞ்சாவூர்

    4- கருப்பையா  - முத்து (வயது-48), புதுக்கோட்டை

    5- ராமகிருஸ்ணன் - குணசேகரன் (வயது-21), புதுக்கோட்டை


    IND/TN/08/MM/214 ம் இலக்க படகில் பயணித்த புதுக்கோட்டையை சேர்ந்த

    1- நடராஜன் - அருள்ராஜ் (வயது-38)

    2- கோவிந்தராஜ் - மருதுவாணன் (வயது-44)

    3- சோணையன் - செல்வராஜ் (வயது-42)

    4- சேப்பன் - மீனாட்சிசுந்தரம் (வயது-32)

    ஆகிய தமிழக மீனவர்கள் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இராமநாதபுரத்தை சேர்ந்த மெல்ரன் - காலைப் (வயது-16), இருதயராஜ் - றிமோற்றன் (வயது-18) ஆகிய இரு சிறுவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment