• Login / Register
  • செய்திகள்

    எதற்கும் அஞ்சப்போவதில்லை - சீமான் பதிலடி!

    தன்தை திருமணம் செய்வதாக கூறி நம்பவைத்து ஏமாற்றியதாக நடிகை விஜயலக்சுமி முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது நான் எங்கும் ஓடி ஒழியவில்லை. குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் தாராளமாக கைது செய்யட்டும். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

    முன்னதாக சுதந்திரபோராட்ட வீரர் பூலித்தேவனின் 308வது பிறந்த நாள், தமிழ்த் தேசியப் போராளி தமிழரசனின் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் கல்வி உரிமைக்காக உயிர் நீத்த அனிதாவின் 6 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (செப்-01) மூவரது திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி நாம் தமிழர் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தபட்பட்டது.

    இவ் அஞ்சலி நிகழ்வில் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

    அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்தில் நடிகை விஜயலட்சுமி விவகாரம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்,
     
    முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மை இல்லை எனில் அதற்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை.

    என் மீதான குற்றச்சாட்டில் அடிப்படை ஆதாரம் இல்லை. அதனால் தான் இத்தனை இலட்சம் இளைஞர்கள் என் கூட பயணிக்கின்றனர்.

    தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே அவதூறை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. 11 வருடங்களாக ஒரே விடயத்தை முன்வைத்து பேசுவதன் நோக்கம் என்ன...? என்மீதான குற்றச்சாட்டை போன்று அதற்கு முன்னதாக வெவ்வேறு மொழிகளைச் சேர்ந்த ஐந்து நபர்கள் மீது இதே போன்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

    போலிஸ் விசாரணை என்பது வழக்கமானது. ஒருவர் முறைப்பாடு பதிவு செய்யும் பட்சத்தில் அது தொடர்பில் விசாரணை செய்வது வழக்கம். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை. அவதூறுகளுக்கு அஞ்சுபவன் அற்ப வெற்றியை கூட தொடமுடியாது. 

    தொடர்ந்தும் எம் பின்னால் மக்கள் ஆதரவு திரண்டு வருவதானால் பொறுத்துக் கொள்ளமுடியதது இவ்வாறு வேண்டுமென்றே செய்கிறார்கள். தொடர்ந்தும் செய்வார்கள். எதையும் எதிர்கொள்வதற்கு நான் தயார்.

    நாம் முன்னெடுத்து வரும் இனத்திற்கான அரசியல் பயணத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு அவதூறு பரப்புகிறார்கள். இதைகண்டு அஞ்சுபவன் நான் கிடையாது. நான் எங்கும் ஓடி ஒழியவில்லை. மக்கள் முன்தான் உள்ளேன். குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் கைது செய்யுங்கள். நான் எதற்கும் அஞ்சப் போவதில்லை. என அவர் மேலும் தெரிவித்தார்.

    Leave A Comment