• Login / Register
  • செய்திகள்

    16,000 இருதய அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்; மாரடைப்பால் மரணம்!

    16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட குஜராத்தில்  இதய அறுவை சிகிச்சை நிபுணர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    குஜராத் மாநிலம் ஜாம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கெளரவ் காந்தி. 41 வயதான இவர், இதய அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றிவந்தார். 

    ஜாம்நகரில் மருத்துவம் பயின்ற இவர், அகமதாபாத்தில் இதய அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றார். இவர் தனது மருத்துவப் பணிக் காலத்தில் 16 ஆயிரம் இதய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். 

    எனினும், செவ்வாய்க்கிழமை காலை மாரடைப்பால் இவர் உயிரிழந்தார். திங்கள் கிழமை இரவு நோயாளிகளுக்கு வழக்கம்போல் மருத்துவம் பார்த்துவிட்டு வீடு திரும்பியு அவர், இரவு உணவுக்குப் பிறகு படுத்து உறங்கியுள்ளார். 

    காலை நீண்ட நேரம் ஆகியும் எழாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவரை எழுப்ப முயன்றுள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment