• Login / Register
  • செய்திகள்

    சென்னையில் கொளுத்தப்போகும் வெயில்; வெதர்மேன் எச்சரிக்கை

    இன்றைய காலநிலையின்பாடி  நேற்றைய தினத்தை விட இன்று வெயிலின்தாக்கம் அதிகமாக இருக்கும் என தமிழ்நாடு வெதர்மேன்  தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    அவரது ட்விட்டர் பதிவில்; சென்னையில் நேற்றை விட வெயில் அதிகமாக இருக்கும். நேற்று மீனம்பாக்கத்தில் வெயில் அதிகமாக இருந்தநிலையில் இன்றும் அதிகபட்ச வெப்பநிலைபதிவாக வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் வேலூர் ஆகிய அதிக வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

    கத்திரி வெயில் முடிந்தும் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. வெப்ப அளவுகள் வருமாறு :

    (பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம் -105.8, திருத்தணி-105.08, சென்னை நுங்கம்பாக்கம்- 104.18, வேலூா்-104.18, புதுச்சேரி-102.56, கடலூா்-102.2, பரமத்தி வேலூா்-102.2,நாகை-102.02,திருச்சி-101.66,மதுரை நகரம்-101.48, திருப்பத்தூா்-100.76, பாளையங்கோட்டை-100.58,ஈரோடு-100.4, மதுரை விமானநிலையம்-100.4, பரங்கிபேட்டை-100.4,தஞ்சாவூா்-100.4.

    Leave A Comment