• Login / Register
  • செய்திகள்

    துரை வைகோ-வுக்காக மதிமுக-வில் புதிய பதவி

    துரை வைகோ-வுக்காக மதிமுக-வில் முதன்மைச் செயலாளர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட உள்ளதாக தாகவல் வெளியாகியுள்ளது.

    திமுகவில் வாரிசு அரசியல் முன்னெடுக்கப்படுவதாக கூறி வைகோ தனிக்கட்சி தொடங்கிய நிலையில் இன்று அவரது மன் துரை வைகோ கட்சி அரசியலுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டு உயர்நிலை பதவிகளுக்கு முன்னகர்த்தப்பட்டு வருகிறார்.

    துரை வைகோ கட்சி அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட போதே மதிமுக-வில் கடும் அதிருப்தி நிலவியது.

    இருந்தபோதிலும் கட்சி அரசியலுக்குள் கொண்டுவரப்பட்ட சில காலத்திலேயே மதிமுக-வின் தலைமை கழக செயலாளராக துரை வைகோ நியமிக்கப்பட்டார்.

    வாரிசு அரசியலுக்கு எதிராக தொடங்கப்பட்ட மதிமுக-விலேயே வாரிசு அரசியல் தலையெடுக்கத் தொடங்கியமை அக்கட்சிக்ககுள் தொடர்ந்தும் அதிருப்தியை ஏற்படுத்திவருகிறது.

    இந்நிலையில், ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு ஜூன் ஒன்றாம் தேதி வேட்பு மனு தாக்கல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மதிமுகவின் பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    வைகோவுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வரும் மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமிக்கு பதில், புதிய அவைத் தலைவராக கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் அர்ஜுன்ராஜ் தேர்வு செய்யப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

    மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருக்கக் கூடிய துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டு அதற்கு தேர்வு செய்யப்பட உள்ளார்.

    மதிமுகவின் பொருளாளராக இருக்கக் கூடிய கணேசமூர்த்தி அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொருளாளர் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதேவேளை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் துரை வைகோ போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது முதன்மைச் செயலாளராக பதவி வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment