• Login / Register
  • செய்திகள்

    கரீபியன் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

    பனாமா- கொலம்பிய எல்லைக்கு சற்று அப்பால் கரீபியன் கடலில் நேற்று புதன்கிழமை இரவு 6.6 மெக்னிடியயூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத அருகில் உள்ள பகுதிகளில் ஏதேனும் காயங்கள் அல்லது சேதங்கள் ஏற்பட்டதா என்பது குறித்து உடனடி தகவல் தெரியவரவில்லை.

    இந்த நிலநடுக்கம் பனாமாவின் போர்டோ ஒபால்டியாவிலிருந்து வடகிழக்கே 41 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    12,000 பேர் வலுவான நடுக்கத்தை உணர்ந்ததாகவும், 547,000 மிதமான நடுக்கத்தை உணர்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

    நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதுடன், அதனால் ஏற்பட்ட அதிர்வு சுமார் 10 நிமிடங்களுக்குப் பிறகு 4.9 மெக்னிடியூட் அளவில் உணரப்பட்டுள்ளது.

    பனாமாவின் தலைநகரின் சில பகுதிகளில் நில நடுக்கம் உணரப்பட்டது, ஆனால் சில இடங்களில் உணரப்படவில்லை. கொலம்பிய நகரங்களான மெடலின் மற்றும் காலியில் வசிப்பவர்களும் நில நடுக்கத்தை உணர்ந்ததாக அந்த நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    எவ்வாறாயினும், பனாமாவின் தேசிய அவசரகால செயல்பாட்டு மையம், ஆழிப்பேரலை ஏற்படுவதற்கான வாய்ப்பை நிராகரித்துள்ளது.

    Leave A Comment