சென்னையை சேர்ந்த கணினி தொழிற்நுட்ப வல்லுநர் அமெரிக்காவில் பலி!
சென்னையை சேர்ந்த இளம் கணினி தொழிற்நுட்ப வல்லுநர் ஒருவர் அமெரிக்காவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடந்த விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து சம்பவத்தில் உயிரிழந்தவர் சென்னையை சேர்ந்த 32 வயதான மாரியப்பன் சுப்ரமணியன் எனத் தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி வீதியை கடக்கும் சிகப்பு சமிக்ஞையையும் மீறி வேகமாக வந்த கார் அவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சென்னை தாம்பரத்தை சேர்ந்த மாரியப்பன் அமெரிக்காவில் HCL நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்துள்ளார்.
திருமணமான அவருக்கு நான்கு வயதில் மகன் இருக்கின்றார்.
அண்மையிலேயே அவர் புளோரிடாவில் இருந்து தாம்பரத்திற்கு வந்துச் சென்ற நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Leave A Comment