• Login / Register
  • செய்திகள்

    ஒரே நாளில் 30 தாசில்தார்கள் இடமாற்றம்; கோவை கலெக்டர் அதிரடி!

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடமையில் உள்ள 30 தாசில்தார்கள் ஒரே நாளில் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இத்தகவலை தெரிவித்துள்ளார்.

    அதனடிப்படையில் அதிரடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ள தாசில்தார்களது முழு விபரம் வருமாறு:-

    கோவை வடக்கு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாரராக யமுனா,

    தெற்கு கலால் மேற்பார்வை அலுவலராக ராஜேஸ்குமார், கூடுதல் பொறுப்பில் ரமேஷ்,

    வடக்கு நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாரராக உமா மகேஸ்வரி,

    அன்னுார் வட்டம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தாரராக புனிதவதி,

    மதுக்கரை வட்டம் சமூக பாதுகாப்புத் திட்டம் தனி தாசில்தாரராக மேகலா ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், பாதுகாப்பு தொழில் பூங்கா (டிட்கோ) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் தனி தாசில்தாரராக பத்மாவதி,

    தெற்கு நகர நிலவரித் திட்டம் தனி தாசில்தாரராக கிருஷ்ணவேணி,

    நகர்புற நிலவரி வசூல் தனி தாசில்தாரராக குமரி ஆனந்தன் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனி தாசில்தாரராக ராஜா,

    தெற்கு குடிமைப் பொருள் தனி தாசில்தாரராக சர்மிளா,

    கோவை தெற்கு தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் கிடங்கு மேலாளராக ராஜன், கூடுதல் பொறுப்பில் குமார்,

    தெற்கு கோட்ட கலால் அலுவலராக கனகேஸ்வரி,

    கலெக்டர் அலுவலகம் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாரராக சரவணன்,

    வடக்கு வட்டம் தாசில்தாரராக தங்கராஜ் ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    அதேபோல அன்னுார் வட்டம் தாசில்தாரராக காந்திமதி,

    சூலுார் வட்டம் தாசில்தாரராக நித்திலவல்லி,

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் பாதுகாப்பு தொழில் பூங்கா (அலகு 1) தனி தாசில்தாரராக உமா பரமேஸ்வரி,

    ஆதிதிராவிடர் நலம் தனி தாசில்தாரராக மாலதி ஆகியோரும் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் விமான ஓடுதள விரிவாக்கம் (அலகு 2) தனி தாசில்தாரராக மல்லிகா,

    அரசு கேபிள் டி,வி., தனி தாசில்தாரராக தமிழ்ச்செல்வி என  மொத்தம் 30 பேர் தற்போது உள்ள பணியிடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு புதிய இடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Leave A Comment