• Login / Register
  • செய்திகள்

    கிரிமினல் வழக்கில் சிக்கிய டொனால்டு ட்ம்ரப்; கைதாகலாம் என எதிர்பார்ப்பு

    எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளநிலையில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு ட்ம்ரப் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    நியூயார்க் கிராண்ட் ஜூரி கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துள்ளது. 

    76 வயதான டொனால்டு ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்ட்ராமி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார். 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் நேரத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக கிளம்பியது. இதனை மறைப்பதற்காக நடிகைக்குத் தேர்தல் பரப்புரைக்கான நிதியில் இருந்து ட்ரம்ப் பணத்தை கொடுத்ததாகவும் கூறப்பட்டு அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு அதிபர் அல்லது முன்னாள் அதிபர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டது இதுவே முதல் முறை.

    கிரிமினல் வழக்கு விசாரணை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவண புகைப்படம் மற்றும் கை ரேகை போன்றவை எடுக்கப்பட்டு பதிவு செய்யப்படும். எனவே, ட்ரம்ப்பையும் கையில் விலங்கு பூட்டி கைது செய்து,, மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2024 அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அதற்கு முட்டுக்கட்டை போடவே ஜோ பைடன் அரசு இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக ட்ரம்ப் புகார் தெரிவித்துள்ளார்

    Leave A Comment