• Login / Register
  • செய்திகள்

    மெஸ்ஸி குறித்த கேள்வி; வைரலாகும் கேரள சிறுமியின் பதில்!

    கால்பந்து ஜாம்பவான் லயனல் மெஸ்ஸி தொடர்பில் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு கேரள சிறுமி ஒருவர் அளித்த பதில் அனைரது கவனத்தை ஈர்க்கும் வகையில் டீவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

    இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    உலகம் முழுவம் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்துள்ள கால்பந்து விளையாட்டிற்கு கேரளாவிலும் அதிகளவான ரசிகர்கள் உண்டு.

    குறிப்பாக, கேரளாவில் அர்ஜெண்டினா, பிரேசில், போர்ச்சுகல் போன்ற அணியை வெறித்தனமாக பின்பற்றும் ரசிகர்கள் உள்ளனர். அப்படி ஒரு குட்டி ரசிகையின் செயல் தான் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள புதுபள்ளி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ரிசா பாதிமா.

    4ஆம் வகுப்பு படிக்கும் இவர் சமீபத்தில் எழுதிய மலையாள பாடத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுதிய பதில் தான் தற்போது டிரென்டாகி வருகிறது.


    அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி குறித்து கட்டுரை எழுதுங்கள் என 5 மார்க் கேள்வி கேட்கப்பட்டிருந்தது.

    அதற்கு அந்த சிறுமி 'நான் பிரேசில் நாட்டின் ரசிகை. எனக்கு வீரர் நெய்மாரை தான் பிடிக்கும். மெஸ்ஸியை பிடிக்காது' என பதில் எழுதியுள்ளார். சிறுமியின் இந்த பதிலை பார்த்து ஆசிரியை ஷாக் ஆனது மட்டுமல்லாது அதை மற்றவர்களிடம் காட்டியுள்ளார்.

    பின்னர் சிறுமியிடம் அழைத்து இது குறித்து விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி 'நான் பிரேசில் ரசிகை தான். தேர்வு தாளில் மெஸ்ஸின் போட்டோவை பார்த்ததும் மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன்' என்றுள்ளார்.

    சிறுமியின் இந்த செயலும் அவர் பதில் எழுதிய தேர்வு தாளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    Leave A Comment