• Login / Register
  • செய்திகள்

    அரசியல் பழிவாங்கல்; மத்திய அரசுக்கு எதிராக 14 கட்சிகள் வழக்கு!

    எதிர்க்கட்சிகளை இலக்கு வைத்து விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.

    மத்திய அரசு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, எதிர்க்கட்சிகள் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆர்.ஜே.டி, ஆம் ஆத்மி உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகள் சார்பில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி முறையிட்டுள்ளார்.

    அந்த மனுவில், மத்திய அரசு விசாரணை அமைப்புகளை தவறாக வழிநடத்துவதாகவும், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை மிரட்டுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மிரட்டப்படும் தலைவர்கள் பாஜகவில் இணைந்தவுடன் அவர்கள் மீதான வழக்குகள் கைவிடப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ள நிலையில்,

    சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் பின்பற்றப்பட வேண்டிய கைதுக்கு முன்பான நெறிமுறைகளை வரையறுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஏப்ரல் 5ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதற்கிடையே, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜக, விசாரணை அமைப்புகள் சுதந்திரமாகவே செயல்படுகின்றன என்று கூறியுள்ளது.

    Leave A Comment