• Login / Register
  • செய்திகள்

    இம்ரான் கான் பயங்கரவாதி: நவாஸ் ஷெரீப்பின் மகள் ஆவேசம்

    முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பயங்கரவாதி போன்று ஒழிந்துகொண்டு செயற்படுகிறார் என்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை பயங்கரவாத அமைப்பாக கருதுமாறும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் மரியம் நவாஸ் ஷெரீப் கோரிக்கை வைத்துள்ளார்.

    லாகூரில் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது இவ்வாறு தெரிவித்தார்.

    செய்தியாளர் சந்திப்பில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ்,

    "தடைசெய்யப்பட்ட அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளை அரசு, அரசு எப்படி கையாள்கிறதோ, அதே வழியில் இம்ரான் கானையும் கையாள வேண்டும். பிடிஐ-யை அரசியல் கட்சியாக நினைத்து கையாள்வது முடிவுக்கு வர வேண்டும். பயங்கரவாதிகளை கையாள்வது போலவே அரசாங்கம் அவர்களையும் கையாள வேண்டும்.

    பயங்கரவாதத்தை செயல்படுத்த திட்டமிட்டால் பயங்கரவாதிகள் என்ன செய்வார்கள்? அவர்கள் குகைகளில் ஒளிந்துகொண்டு அங்கிருந்து கட்டளைகளை அனுப்புவார்கள்.

    அரசியல் மற்றும் ஜனநாயக இயக்கங்களை எப்போதுமே அரசியல் தலைவர்கள் முன்னணியில் இருந்து வழிநடத்துவார்கள்.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு மட்டுமே "ஒரு குகையிலிருந்து" உத்தரவுகள் வழங்கப்படும். அதேபோல இம்ரான் கானும் தனது ஜமான் பூங்கா இல்லத்தில் பதுங்கியிருக்கிறார்" என்று அவர் கூறினார்.

    Leave A Comment