• Login / Register
  • செய்திகள்

    அண்ணாமலையின் ராஜினாமா பேச்சு; பாஜக விளக்கம்!

    அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வெளியான தகவல் தொடர்பாக பாஜக விளக்கம் அளித்துள்ளது.

    தமிழக பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்களின் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில்  பாஜக வளர முடியும்.

    அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன் என அண்ணாமலை பேசியதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டது. வானதி சீனிவாசன், நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் கூட்டத்திலேயே இதுதொடர்பாக கருத்துக்களை முன்வைத்ததாகவும் கூறப்பட்டது.

    இந்த நிலையில் இதற்கு பாஜக தரப்பில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியதாக வரும் செய்தி தவறானது” என விளக்கம் அளித்துள்ளார்.

    இதேவேளை, பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை இதுவரை இது தொடர்பில் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment