மக்களுக்கு இலவசமாக பால் விநியோகம்; பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்!
பால் கொள்முதல் விலையை உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் பாலுற்பத்தியாளர்கள் போராட்டத்தினை சேலத்தில் பால் வாங்க வந்த மக்களுக்கு இலவசமாக பால் வழங்கி தங்களது போராட்டத்தை தீவிரப்பபடுத்தியுள்ளனர்.
ஆவின் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்யும் ஒரு லிட்டா் பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.51 வழங்க வேண்டும்; ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு இலவச காப்பீடு செய்து தர வேண்டும்; கால்நடை தீவனங்களுக்கு மானியம் வழங்கிட வேண்டும்; காலதாமதமின்றி, பண பட்டுவாடா செய்ய வேண்டும்; பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளா்களை பணி வரையறை செய்து ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஇ தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளா் நலச் சங்கத்தினா் கடந்த 10-ஆம் தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்தும், கருப்புக் கொடி கட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனையடுத்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவா் வழக்குரைஞா் வாழப்பாடி ராஜேந்திரன் உள்ளிட்ட பால் உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் உயரதிகாரிகள் வியாழக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையில், விவசாயிகளின் கோரிக்கை நிறைவேறாததால், பால் உற்பத்தியாளா்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனா்.
தமிழகம் முழுவதும் 9,000 பால் கூட்டுறவு சங்க விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். எனவே, பால் உற்பத்தியாளா்கள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி, பால் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்திக் கொடுத்து பால் உற்பத்தியாளா், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில், சேலம் பால் கூட்டுறவு சங்கத்திற்கு பால் வாங்க வந்த மக்களுக்கு இலவசமாக பால் வழங்கி தங்களது போராட்டத்தை தீவிரப்பபடுத்தியுள்ளனர்.
Leave A Comment