• Login / Register
  • செய்திகள்

    அதிமுக-வுடன் கூட்டணி ஏற்பட்டால் ராஜிநாமா? - அண்ணாமலை கொந்தளிப்பு

    அதிமுக - பாஜக இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக கூட்டணிக்கு தமிழக பாஜக தலைவர் கு. அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து கட்சியைவிட்டு வெளியேறியவர்கள் வரிசையாக அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.


    அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் நிலையில் கூட்டணி தர்மத்தை மீறி கட்சியில் இருந்து விலகியவர்களை இபிஎஸ் இணைத்து வருவதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்ட பாஜகவினர் 'துரோகி இபிஎஸ்' என போஸ்டர் அடித்து ஒட்டியதுடன் இபிஎஸ்-இன் புகைப்படத்தையும் எரித்து போராட்டம் நடத்தப்பட்டது.


    இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் மாறி மாறி சூடான கருத்துகள் வெளியிட்டு வந்தமை அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.


    இந்நிலையில், சென்னை அமைந்தகரையில் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.


    இதில் பங்கேற்று பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டால்தான் தமிழ்நாட்டில்  பாஜக வளர முடியும்.

    அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டால் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக கட்சி பணி செய்வேன் என பேசியதாகவும், அண்ணாமலை பேச்சால் கட்சி மூத்த நிர்வாகிகள் இடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    Leave A Comment