அமெரிக்காவில் நித்தியானந்தா கைவரிசை; 30 மாகாணங்களில் ஊழல்!
சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா அமெரிக்காவில் தனது கைவரிசையை காட்டியுள்ளதாக அங்குள்ள ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.
இந்திய அரசால் தேடப்படும் நித்யானந்தா, அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட மாகாணங்களில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டு ஊழலில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
நூவா்க் நகரத்துக்கும் கைலாசாவுக்கும் இடையேயான சகோதரி நகர ஒப்பந்தம் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலாசார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுக்கிறது.
இதேபோல், ரிச்மண்ட் (விா்ஜினியா மாகாணம்), டேட்டன் (ஒஹையோ), பியூனாபாா்க் (ஃபுளோரிடா) உள்பட 30-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைலாசா நாடு தொடா்பான விவரங்களை சரி பாா்க்காமல் அமெரிக்க மாகாணங்கள் புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும், மாகாணங்களின் மேயா், நகராட்சி கவுன்சில் உள்பட தன்னாட்சி அரசும் போலி கைலாசா நாட்டிடம் ஏமாந்துள்ளதாகவும் அந்த ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளை, ‘யுனைட்டட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா’ என்ற தனி நாடு பெயரில் அண்மையில் ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் நித்யானந்தாவின் நிா்வாகிகள் பங்கேற்றுப் பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவா்கள் பேசிய பேச்சை அவைக்குறிப்பில் இருந்து ஐ.நா. நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment