தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் 304 பேர்
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 304-ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய (17) தினம் புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும் 56-ஆக உயா்ந்துள்ளது.
இவ்வாறு வெள்ளிக்கிழமை தொற்றுறுதியானோரில் அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கும், சென்னையில் 12 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர, தாய்லாந்து, கத்தாா், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த மூவருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனா நோய்த் தொற்றிலிருந்து 36 போ் விடுபட்டுள்ளனா்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களது எண்ணிக்கை 304 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment