இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவர் ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளன தலைவருமான ஜெ. ஸ்ரீ ரங்கா இன்று (17) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டு வவுனியா - செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில், குறித்த வழக்குடன் தொடர்புடைய சாட்சியாளர்களை அச்சுறுத்தியதாக தெரிவித்து ஸ்ரீ ரங்காவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave A Comment