• Login / Register
  • செய்திகள்

    தங்கம் விலை இன்று மேலும் அதிகரிப்பு!

    இலங்கையில் தங்கம் விலை தொடர்ந்தும் அதிகரித்து வரும் நிலையில் இன்று (17) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.

    கடந்த வாரம் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வெகுவாக அதிகரித்திருந்த நிலையில், தங்கத்தின் விலையிலும் வீழ்ச்சி பதிவாகியிருந்தது. 

    எனினும், இந்த வார ஆரம்பத்தில் இருந்து தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

    இன்று(17) காலை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகை கடைகளில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, ஒரு இலட்சத்து 88 ஆயிரத்தை கடந்து அதிகரித்துள்ளது.

    அதேநேரம், 22 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 174,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

    Leave A Comment