• Login / Register
  • செய்திகள்

    உக்ரேனுக்கு போர் விமானங்களை வழங்கும் போலந்து!

    சோவியத் காலத்தைச் சேர்ந்த 4 மிக் ரக போர் விமானங்களை உக்ரேனுக்கு அனுப்பவுள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.

    எதிர்வரும் சில நாட்களில் இவ்விமானங்கள் அனுப்பப்படும் என போலந்து ஜனாதிபதி அன்ட்ரெஜ் டுடா தெரிவித்துள்ளார். 

    கடந்த வருடம் ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமான பின்னர், உக்ரேனுக்கு போர் விமானங்களை அனுப்பும் முதலாவது நேட்டோ அங்கத்துவ நாடு போலந்து ஆகும்.

    இது உக்ரேனின் வான்பலத்தை அதிகரிக்கும் என்ற போதிலும், யுத்தத்தில் இது தீர்க்கமான பங்காற்றும் என எதிர்பார்க்கப்படவில்லை.  

    மேலும் பல நாடுகள் போலந்தை பின்பற்றும் என தான் நம்புவதாக உக்ரேனின் பிரதி சபாநாயகர் ஒலீனா கொன்ட்ராட்யுக் கூறியுள்ளார்.

    Leave A Comment