ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு முதல்வர் நேரில் ஆறுதல்!
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்கட்சித் துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அவரது தாயார் பழனியம்மாள் மறைவுக்கு ஆறுதல் கூறினர்.
Leave A Comment