• Login / Register
  • செய்திகள்

    கடும் அமளி : 5 ஆவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்

    இன்றும் ஐந்தாவது நாளாக நாடாளுமன்றம் முழுவதுமாக முடங்கியுள்ளது  எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் கடும் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை வரும் திங்கள்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுகுழு விசாரணை அமைக்கக்கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாடாளுமன்ற வளாகத்தில் நடக்கும் எதிர்கட்சிகளின் போராட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    இந்திய ஜனநாயகம் குறித்து விமா்சித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கோர வலியுறுத்திய பாஜக உறுப்பினா்களின் போராட்டம், அதானி குழுமத்தின் மீதான மோசடி புகாா் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய எதிா்க்கட்சி உறுப்பினா்களின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடா்ந்து 5-ஆவது நாளாக பாதிக்கப்பட்டுள்ளது.

    Leave A Comment