• Login / Register
  • செய்திகள்

    இலங்கை: கூட்டமைப்பின் முன்னாள் எம்பி மரணம்!

    வீதி விபத்தில் சிக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன சிகிச்சை பலனின்றி இன்று (17) மதியம் உயிரிழந்துள்ளார்.

    விபத்தில் சிக்கி படுகாயமடைந்த, அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

    இன்று காலை 6.45 அளவில் பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான சாலையில் – சென்று கொண்டிருந்த பேருந்துடன் மோதி விபத்து இடம்பெற்றிருந்தது.

    தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானார்.

    இவ்விபத்தில் படுங்காயமுற்ற இவர் கல்முனை ஆதார வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

    Leave A Comment