• Login / Register
  • செய்திகள்

    இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து!

    இந்திய ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பறந்துகொண்டிருந்த போது விழுந்து விபத்துக்குள்ளானது.

    அருணாச்சல பிரதேசத்தின் மண்டலா மலைப் பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டரே விழுந்து விபத்துக்குள்ளானது.

    விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இன்று காலை 9:15 மணியளவில், போம்டிலா அருகே ராணுவ ஹெலிகாப்டர்  பறந்து கொண்டிருந்த போது விமானப் போக்குவரத்துக்  கட்டுப்பாடு அறை உடனான தொடர்பை இழந்ததாகக் கூறப்படுகிறது.

    Leave A Comment