• Login / Register
  • செய்திகள்

    திருச்சியில் குழு தேமாதல்; தி.மு.க முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கம்!

    திருச்சியில் தி.மு.க கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில் முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து இடைநீக்கப்பட்டுள்ளதுடன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் இடைநீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி ராஜாகாலனி பகுதியில் நடைபெற்ற இறகுப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதனை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். 

    இந்நிலையில் நிகழ்ச்சிக்கு எம்பி திருச்சி சிவாவின் பெயர் எங்கும் குறிப்பிடப்படவில்லை எனக் கூறி அவரின் ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்புக்கொடி காட்ட முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு மற்றும் வாகனத்தை பாட்டில் மற்றும் கற்களைக் கொண்டு தாக்கினர். 

    இந்த நிலையில், திருச்சி சிவா வீடு மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் 4 பேரை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

    திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    திருச்சி மத்திய மாவட்டத்தை சேர்ந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் தி.முத்துசெல்வம், மாவட்டப் பொருளாளர் எஸ்.துரைராஜ், 55வது வட்டச் செயலாளர் வெ.ராமதாஸ் ஆகியோர் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    Leave A Comment