• Login / Register
  • செய்திகள்

    ஓபிஎஸ் வேட்பாளர் அதிமுகவில் இணைவு; செந்தில் முருகனை நீக்கிய ஓபிஎஸ்!

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வாபஸ் பெறப்பட்டிருந்த செந்தில் முருகன் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார்.

    இதையடுத்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த செந்தில்முருகன், அதிமுக இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அந்தக் கட்சியில் நேற்று (09) வியாழக்கிழமை இணைந்தாா்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தோ்தலில் ஓ.பன்னீா்செல்வம் அணி சாா்பில் செந்தில்முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, வேட்புமனுவும் தாக்கல் செய்தாா். பொதுக்குழு தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பு அளித்திருந்த நிலையில், ஓபிஎஸ் உத்தரவின் பேரில், அவா் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றாா்.

    இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் செந்தில்முருகன் வியாழக்கிழமை அக்கட்சியில் இணைந்தாா். அவருடன் ஈரோட்டைச் சோ்ந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள் பலரும் அதிமுகவில் இணைந்தனா்.

    ஓபிஎஸ் நடவடிக்கை

    முன்னதாக, செந்தில்முருகன் எடப்பாடி பழனிசாமி அணியில் இணையும் தகவல் கிடைத்ததும், அவரை கட்சியிலிருந்து ஓ.பன்னீா்செல்வம் நீக்கி அறிவித்தாா்.

    கட்சி கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்டதால் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    Leave A Comment