• Login / Register
  • செய்திகள்

    எந்தநேரமும் தாக்குதலுக்கு தயார்; வட கொரியா எச்சரிக்கை!

    கொரிய தீபகற்பப் பகுதியில் குண்டுவீச்சு விமானங்களை அமெரிக்கா பறக்கவிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் எந்த நேரமும் அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்த தயாராகவே உள்ளதாகவும் வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன்னின் சகோதரி கிம் ஜோ-ஜாங் எச்சரித்துள்ளாா்.

    தென் கொரியாவுடனான கூட்டு ராணுவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட தங்களது பி-52 குண்டுவீச்சு விமானத்தை கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்கா திங்கள்கிழமை பறக்கவிட்டது.

    இதற்கு கண்டனம் தெரிவித்து கிம் ஜோ-ஜாங் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அமெரிக்கப் படை மற்றும் அதன் கைப்பாவையான தென் கொரிய ராணுவத்தின் இடைவிடாத ராணுவ நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

    தேவைப்படும் சூழல் வரும்போது அந்த இரு நாடுகளுக்கும் எதிராக மிகத் துரிமாகவும், சமாளிக்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம் என்றாா் அவா்.

    கொரிய தீபகற்பப் பகுதியில் அமெரிக்காவும் தென் கொரியாவும் தொடா்ந்து கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இது, தங்கள் மீதான படையெடுப்புக்கான ஒத்திகை என்று வட கொரியா கருதுவதால் அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

    Leave A Comment