• Login / Register
  • செய்திகள்

    தமிழில் பெயர் பலைகை; வணிகர்களுக்கு ஒரு மாத அவகாசம் - ராமதாஸ் அறிவிப்பு!

    தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளை ஒரு மாதத்திற்குள் தமிழில் மாற்றாவிடில் கருப்பு மை கொண்டு அழிப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் தமிழ்நாட்டில் தமிழை வளர்த்தெடுப்பதற்கான தேவையை வலியுறுத்தி "தமிழைத் தேடி...'' என்ற தலைப்பில் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விழிப்புணர்வு பயணம் மேற்ககொண்டிருந்தார்.

    உலக தாய்மொழி நாளான பிப்ரவரி 21-ம் நாள் சென்னையில் தொடங்கும் இந்த பயணம் நேற்று பிப்ரவரி 28-ம் நாள் மதுரையில் நிறைவடைந்துள்ளது.

    கடந்த பிப்.21ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்திலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் “தமிழைத்தேடி” என்ற பயணத்தைத் தொடங்கினார். மயிலாடுதுறை, தஞ்சை வழியாக 7ஆம் நாள் பயணமாக நேற்று முன்தினம் திருச்சியை வந்தடைந்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் பொதுக்கூட்டமும் நேற்று முன்தினம் (27) மாலை நடைபெற்றது.

    மருத்துவர் ராமதாசு பேசும்போது, “வீட்டில் தமிழ் இல்லை, பள்ளியில் தமிழ் இல்லை, குழந்தைகள் மம்மி என்றே அழைக்கவேண்டும் என்று அம்மாக்கள் விரும்புகிறார்கள்“ என்று குற்றம் சாட்டினார். மேலும்,“இன்று திருச்சி வரும்போது நல்ல செய்தியைத் தொழிலாளர் நலத்துறை வெளியிட்டிருந்தது. வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்கவேண்டும் என்ற அறிவிப்பைப் பாராட்டுகிறேன். இது என் பயணத்திற்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

    வணிகர்கள் இன்னும் ஒரு மாதத்திற்குள் வணிக நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழை இடம் பெறச் செய்யுங்கள். இல்லையென்றால் நாங்கள் கருப்பு மை வாளியோடும் ஏணியோடும் வந்துவிடுவோம். தமிழ்நாட்டில் தமிழில் முனைவர் பட்டம் முடித்து 2இலட்சம்பேர் உள்ளனர். இவர்களைக் கொண்டு தமிழ் இல்லாத வணிக நிறுவனங்களின் பெயர்களை அழிக்கவைப்போம். தமிழைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. அதனால்தான் தஞ்சையில் எங்களுக்குத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. என்றார்.

    Leave A Comment