• Login / Register
  • செய்திகள்

    வாக்களிக்க 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள்; தாமதத்தால் குழப்பம்!

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதால் வாக்களிப்பதற்கு ஏற்பட்டுவரும் தாமதம் காரணமாக வாக்குச்சாவடி ஒன்றில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தங்களுக்கு பிடித்த வேட்பாளர்களையும் சின்னங்களையும் தேடி வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என்பதால் ஒருவர் வாக்களிக்க எடுத்துக்கொள்ளும் நேரம் அதிகமாகிறது.

    எனவே வரிசையில் நிற்கும் கூட்டம் குறையாமல் உள்ளது. மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தங்களுக்கு விருப்பமான வேட்பாளர் பெயர் எந்த பெட்டியில் உள்ளது என்பதை முன்கூட்டியே அறிய வாக்குச்சாவடிகளில் சுவரெட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து வாக்காளர்கள் கூறியதாவது: 5 பெட்டிகள் இருப்பது இதுவே முதல் முறை. எனவே கொஞ்சம் சிரமமாக உள்ளது. ஆனால் வெளியில் அதை ஒட்டி இருக்கிறார்கள். அதைப்பார்த்து சென்றால் எளிமையாக இருக்கும் என்றார்.

    இதேவேளை, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் முதல் 4 மணித்தியாலங்களில் 63 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

    காலை 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் 2.27 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில் முதல் 2 மணிநேரத்தில் 22,973 வாக்காளர்கள் வாக்களித்திருந்த நிலையில் 11 மணி வரையான 4 மணித்தியாலங்களில் 63,469 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் 32 ஆயிரத்து 562 பேர் ஆண் வாக்காளர்களாகவும், 30 ஆயிரத்து 907 பேர் பெண் வாக்காளர்களாவும் உள்ளனர்.

    வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    Leave A Comment