• Login / Register
  • செய்திகள்

    மேட்டூர் அணை : நீர்வரத்து அதிகரிப்பு

    இன்று காலை மேட்டூர் அணையின் நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 993 கன அடியாக அதிகரித்துள்ளது.
     
    நீர்மட்டம்  103.63 அடியில் இருந்து 103.60 அடியாக குறைந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 841 கன அடியிலிருந்து   வினாடிக்கு 993 கன அடியாக அதிகரித்துள்ளது.  

    அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69.60 டி.எம்.சியாக உள்ளது.

    Leave A Comment